இன்றைய தலைப்புச் செய்தியானது திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு முதல் விஜயின் பரப்புரை பயணத்தில் மாற்றம் வரை விவரிக்கிறது.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு... மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்...
ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினுக்கு இரவு விருந்தளித்து உபசரித்த பிரதமர் மோடி... பகவத் கீதை புத்தகத்தை நினைவுப் பரிசாக வழங்கி கவுரவிப்பு...
தென் தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்... நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...
தீவிரமடைந்த பருவமழையால் தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு... 3 நாட்கள் பாதிப்பு இருந்தால் மருத்துவமனை செல்ல சுகாதாரத் துறை அறிவுறுத்தல்...
தமிழகத்தில் 99.71 சதவீத வாக்காளர்களுக்கு எஸ்ஐஆர் விண்ணப்பங்கள் விநியோகம்... நிரப்பப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை உடனே சமர்பிக்கவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்...
புதுச்சேரியில் சாலைவலம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் விஜயின் பரப்புரைப் பயணத்தில் மாற்றம்... டிசம்பர் 9ஆம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு தவெகவினர் புதிய மனு...
ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து டெல்லியில் முகாமிட்டுள்ள அண்ணாமலை... உள் துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாக தகவல்...
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் புதிய விதிமுறையால் இண்டிகோ நிறுவனத்திற்கு புதுசிக்கல்... 2 நாட்களில் 550க்கும் மேற்பட்ட விமான சேவைகளை ரத்து செய்யவேண்டிய நிர்பந்தம்.
லெபனானின் பல்வேறு நகரங்கள் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்... ஹிஸ்புல்லா ஆயுதக் கிடங்குகளை குறிவைத்து அழித்ததாக இஸ்ரேல் படைகள் தகவல்...
ஆஷஸ் 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் அபார சதம்... முதல்நாள் முடிவில் 325 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி...