தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் எஸ்ஐஆர் படிவங்களைப் சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு... தமிழ்நாட்டில் 14ஆம் தேதி வரை படிவங்களை வழங்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு...
2026ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்றத் தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரம்... மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களை பரிசோதிக்கும் பணிகள் தொடக்கம்...
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 2ஆம் கட்ட விரிவாக்க திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்...‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்றபெயரில் பல்வேறு துறைகளில் சாதனைபடைத்த மகளிர் பங்கேற்கும்நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு...
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு... டெல்லி சென்று அமித் ஷாவை சந்திக்கவுள்ள நிலையில் முக்கிய ஆலோசனை...
எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை... பொதுக்குழுவை சிறப்பாக நடத்தியதற்கு வாழ்த்து கூறியதாக நயினார் நாகேந்திரன் விளக்கம்...
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம்... 38 மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு...
விஜயின் தவெக அலுவலகத்தில் அன்புமணி தரப்பினர்... 17ஆம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க தவெகவுக்கு பாமக அழைப்பு...
தமிழ்நாட்டின் நீண்ட கால ஆட்சியாளரான முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்... மக்களவையில் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை...
கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜய்க்கு முழு அதிகாரம்... தவெக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்...
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள், காவிரிப் படுகை மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்... வானிலை ஆய்வு மையம் கணிப்பு...
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதல்முறையாக தனது நிலைப்பாட்டை தெரிவித்த விஜயின் தவெக... தமிழக அரசுதான் அசாதரணமான சூழலை ஏற்படுத்திவிட்டதாக ட்சியின் இணை பொதுச் செயலர் நிர்மல் குமார் கருத்து...
ஈரோட்டிலும் தவெக தலைவர் விஜய் பரப்புரைக்கு சிக்கல்.... கோயில் நிலத்தில் பரப்புரை நடத்த அனுமதிக்கக் கூடாது என அறநிலையத் துறை ஆட்சேபம்...
சென்னை எண்ணூரில் ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸார்... காவலர்கள் மீது பெட்ரோல் குண்டுவீசிதப்ப முயன்றதால் தற்காப்புக்காகதுப்பாக்கிச்சூடு என விளக்கம்...
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்... கோயில்களில் தங்கத் தேர் இழுத்தும், ரஜினிக்காக சிறப்பு பூஜைகள் செய்தும் ரசிகர்கள் வழிபாடு...
பிரதமர் மோடியுடன் தொலைபேசி வாயிலாக உரையாடிய டொனால்டு ட்ரம்ப்... இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில், தலைவர்கள் கலந்துரையாடல்...
தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு தனது இல்லத்தில் விருந்தளித்த பிரதமர் மோடி... நாட்டின் வளர்ச்சிப் பயணத்தை வலுப்படுத்த ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம் எனவும் எக்ஸ் தளத்தில் பதிவு...
டெல்லி ராம்லீலா மைதானத்தில் 14ஆம் தேதி பிரம்மாண்ட பேரணி நடத்த காங்கிரஸ் கட்சி திட்டம்... வாக்குத் திருட்டு விவகாரத்தில் பாஜக அரசுக்கு எதிரான பேரணியில் கலந்து கொள்ள அழைப்பு...
அமெரிக்காவின் வாசிங்டன் மாகாணத்தில் கனமழையால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு... குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கியதில், வீடுகளில் முடங்கியவர்கள் படகுகள் மூலம் மீட்பு...
அமெரிக்க நகரங்களில் களைகட்டிய கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்... வீதிகளில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள பொருட்களை வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்...
வெளிநாட்டினர் அமெரிக்காவில் வசிப்பிட உரிமை பெற புதிய திட்டம்... 9 கோடி ரூபாய் மதிப்பிலான கோல்டு கார்டு திட்டத்தை தொடங்கினார் அதிபர் ட்ரம்ப்...
வங்கதேசத்தில் பிப்ரவரி 12ஆம் தேதி பொதுத் தேர்தல்... மாணவர் போராட்டத்தால் ஆட்சி கவிழ்ந்து ஓராண்டுக்குப் பிறகு தேர்தல் அறிவிப்பு...
கிழக்கு ஐரோப்பிய நாடான பல்கேரியாவில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்... பதவியை ராஜினாமா செய்தார் பிரதமர் ரோஷன் ஷெல்யாஜ்கோவ்...
மியான்மரில் மருத்துவமனையை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்... 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக தகவல்...
2025ஆம் ஆண்டிற்கான சிறந்த நபரான ஏஐ கலைஞர்களை தேர்வு செய்து டைம் நாளிதழ் கவுரவிப்பு... செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கிய தனிநபர்களை கவுரவப்படுத்தும் வகையில் அட்டைப் படம் வெளியீடு...
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டி... 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி....