டிசம்பர் 10 காலை தலைப்புச் செய்திகள் pt
இந்தியா

HEADLINES | இன்று கூடும் அதிமுக பொதுக்குழு to வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி!

புதிய தலைமுறையின் இன்றைய காலை தலைப்புச் செய்தியில், பரபரப்பான சூழலில் இன்று கூடும் அதிமுக பொதுக்குழு முதல் வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி வரையிலான செய்திகளைப் பார்க்கலாம்..

PT WEB

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி... வரும் 15ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என கணிப்பு...

திமுக சார்பில் ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ என்ற பெயரில் பரப்புரை இன்று தொடக்கம்... வீடு வீடாக சென்று விடுபட்ட வாக்காளர்களின் விவரங்களை சரிபார்க்க குழுக்கள் அமைப்பு...

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு... கட்சி ஒருங்கிணைப்பு, கூட்டணி நிலைப்பாடு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல்...

சட்டமன்றத் தேர்தலுக்காக 234 தொகுதிகளிலும் விருப்பமனு பெறுவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பு... வரும் 15ஆம் தேதி வரை விருப்பமனு கொடுக்கலாம் என செல்வப்பெருந்தகை தகவல்...

தமிழ்நாட்டில் 4 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்கிறது ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம்... மொழியைக் கடந்து உள்ளடக்கமே முக்கியம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு...

புதுச்சேரியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி பறக்கும்... மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில்உரையாற்றிய தவெக தலைவர் விஜய்உறுதி.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

தவெக பொதுக்கூட்டத்திற்கு பாரபட்சமின்றி பாதுகாப்பு வழங்கிய புதுச்சேரி அரசு, முதல்வர் ரங்கசாமிக்கு நன்றி தெரிவித்த விஜய்... புதுச்சேரி அரசைப் பார்த்து திமுக அரசு கற்க வேண்டும் எனவும் பேச்சு...

புதுச்சேரியில் விஜய் கூட்டத்தில் பங்கேற்க முண்டியடித்த தவெக தொண்டர்கள்... கரூர் துயரத்தை சுட்டிக்காட்டி ஆனந்த் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை எச்சரித்த பெண் ஐபிஎஸ் அதிகாரி...

என்ஆர் காங்கிரஸை கூட்டணிக்குள் இழுக்கும் வகையில் விஜயின் பேச்சு இருந்தது... புதுச்சேரி உள்துறை அமைச்சரும் பாஜகமூத்த தலைவருமான நமச்சிவாயம்கருத்து...

கரூருக்கு தாமதமாக வந்து உயிர்களை பலி வாங்கியவர் விஜய் என திமுக மூத்த தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் கடும் விமர்சனம்.. தமிழக காவல் துறையினரின் நிபந்தனைகளுக்கு விஜய் கட்டுப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு..

கவுன்சிலர்கூட ஆகாதவர் நேரடியாக முதல்வராக விரும்புகிறார்... மத்திய அரசின் திட்டங்களை பட்டியலிட்டு விஜய்க்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்...

தவெக தலைவர் விஜய்

நயினார் நாகேந்திரன் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் டெபாசிட் இழக்க செய்வதுதான் தவெகவின் லட்சியம்... விஜய் மீதான விமர்சனத்திற்கு கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பதிலடி...

மரியாதை தரும் கூட்டணியில் அமமுக இடம்பெறும்... அண்ணாமலையுடனான சந்திப்பு தொடர்பான கேள்விக்கு டிடிவி தினகரன் பதில்...

பாமகவை வேறொருவர் பயன்படுத்த உரிமை இல்லை என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டம்... தேவை என்றால் தனிக்கட்சி தொடங்கிக்கொள்ளட்டும் என்றும் பேச்சு...

கட்சியும் சின்னமும் தமக்குதான் என்பது சட்டப்படி உறுதியாகிவிட்டதாக நிர்வாகிகள் மத்தியில் அன்புமணி பேச்சு... உட்கட்சி விவகாரத்தைப் பற்றி சிந்திக்காமல் தேர்தலுக்கு தயாராகுங்கள் என்றும் அறிவுறுத்தல்....

திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை தொடர்பான அவமதிப்பு வழக்கில் தலைமைச் செயலர் ஆஜராக உயர் நீதிமன்ற கிளை ஆணை.... வரும் 17ஆம் தேதி டிஜிபியும் காணொளி மூலம் ஆஜராக நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவு....

திருப்பரங்குன்றம் விவகாரம்

குடிமக்களின் முன்னேற்றத்திற்கு உள்ள தடைக்கற்களை அகற்றும் சீர்திருத்தங்கள் அதிவேகத்தில் நடைபெற்று வருகின்றன... என்டிஏ எம்பிக்களுடனான சந்திப்பில் பிரதமர் மோடி பேச்சு...

ஜனநாயகத்தை சிதைக்க தேர்தல் ஆணையத்தை பாஜக அரசு பயன்படுத்துவதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு...அனைத்து அரசு அமைப்புகளையும் ஆர்எஸ்எஸ் கைப்பற்றியுள்ளதாக வும்விமர்சனம்...

மாநிலங்களவையில் அமைச்சர் எல். முருகன், திமுக எம்.பி. திருச்சி சிவா இடையே அனல் பறந்த விவாதம்... அவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனும் தமிழில் உரையாடியதால் சுவாரஸ்யமான விவாதம்...

கேரளாவில் 7 மாவட்டங்களில் நடந்த முதற்கட்ட உள்ளாட்சி தேர்தலில் 70 புள்ளி 9 சதவீத வாக்குகள் பதிவு... இடதுசாரி ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி, தேசிய ஜனநாயக கூட்டணி என மும்முனைப் போட்டி...

தங்களது விமான சேவை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாக இண்டிகோ நிறுவனத்தின் சிஇஓ அறிவிப்பு... பணியாளர்கள் பற்றாக்குறையால் தினசரி இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையை குறைப்பதாகவும் தகவல்...

இண்டிகோ விமானம்

இண்டிகோ விமான சேவைகளை 10 விழுக்காடு குறைக்க மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு... பயணிகளின் சிரமத்தைக் குறைக்கவும், நிறுவனத்தின் செயல்பாடுகளை நிலைப்படுத்தவும் நடவடிக்கை என அமைச்சர் ராம்மோகன் நாயுடு தகவல்...

இந்தியாவில் ஒரு லட்சத்து 57 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்கிறது மைக்ரோசாப்ட் நிறுவனம்.... வாய்ப்புக்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து சத்ய நாதெல்லா பதிவு...

இந்தியா, அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை இன்று தொடக்கம்... அமெரிக்க பிரதிநிதி ரிக் ஸ்விட்சர்தலைமையிலான குழுவுடன்ஆலோசனை நடத்தும் மத்தியவர்த்தகளு அமைச்சக அதிகாரிகள்...

இலங்கையின் மட்டக்களப்பில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் தத்தளித்து வரும் யானைகள்... உணவு தேடி குடியிருப்பு பகுதிகளை நோக்கி வனவிலங்குகள் படையெடுப்பு...

தாய்லாந்து, கம்போடியா இடையே மீண்டும் தீவிரமெடுக்கும் மோதல்... எல்லைகளில் குவிக்கப்படும் படைகளால் இருநாட்டு மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்...

india team

அமெரிக்காவின் பல நகரங்களில் கடும் உறைபனி மூட்டம்... வழுக்கும் தன்மை கொண்டதாக மாறிய சாலைகளால் வாகன ஓட்டிகள் பாதிப்பு...

தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் களைகட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்... ஆயிரக்கணக்கான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தோட்டத்தை கண்டு வியக்கும் பார்வையாளர்கள்...

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை வெற்றியுடன் தொடங்கியது இந்தியா... கட்டாக்கில் நடைபெற்ற முதல்போட்டியில் 101 ரன்கள் வித்தியாசத்தில்அபார வெற்றி....

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்தது... சென்னையில் ஒரு சவரன் 96,000 ரூபாய்க்கு விற்பனை...