தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை... உதகை, தேனி, உளுந்தூர்பேட்டையில் பெய்த கனமழையால் குளிர்ச்சியான சூழல்...
நெல்லை, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை... சென்னையில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு...
சாத்தனுார் அணையிலிருந்து 6,500 கன அடி நீர் திறப்பு... கடலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ஆயிரத்து 280 ரூபாய் உயர்வு... சவரன் விலை 92 ஆயிரம் ரூபாயை தொட்டதால் சாமானியர்கள் கலக்கம்...
நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்... 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்க அறிவுறுத்தல்...
இந்தியாவில் பருப்பு உற்பத்தியை அதிகரிக்க 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி... 100 மாவட்டங்களில் விளைபொருள் உற்பத்தியை அதிகரிக்க 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டமும் தொடக்கம்...
2021 முதல் 23ஆம் ஆண்டு வரையிலான கலைமாமணி விருதுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்...எஸ்.ஜே.சூர்யா, லிங்குசாமி, அனிருத், சாய் பல்லவி, மணிகண்டன் உள்ளிட்ட 90 பேருக்கு கௌரவம்...
கலைமாமணி விருது விழாவில் பின்னணி பாடகர் கே.ஜே. யேசுதாஸுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது... யேசுதாஸுக்கு பதிலாக விருதை பெற்றுக்கொண்டார் அவரது மகன் விஜய் யேசுதாஸ்...
மொழி சிதைந்தால் அரசியல் அடையாளம் சிதைந்துவிடும்... கலைகளை காப்போம் மொழியைக் காப்போம் என கலைமாமணி விருது வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு...
மகளிர் உரிமைத் தொகையா அல்லது தேர்தல் அச்சாரத் தொகையா?... முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி...
அதிமுகவை நம்பி வந்தவர்கள் யாரும் கெட்டது கிடையாது... மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைந்த விழாவில் பழனிசாமி பேச்சு...
தவெக கொடியை தூக்கும் அளவுக்கு அதிமுகவினர் இழிபிறவிகள் அல்ல... பழனிசாமியே தவெக கொடியை காட்ட வைப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு செல்லூர் ராஜு பதில்...
கூடும் கூட்டம் அரசியல் அல்ல என விஜய் மீது சீமான் சாடல்... தவெக - திமுக இடையேதான் போட்டி என விஜய் கூறியது தொடர்பாக கருத்து...
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட மனுக்கள்... நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்....
விருதுநகர் அருகே கழிவுத்துணிகளை ஏற்றிச் சென்ற மினி லாரியில் தீ விபத்து... நல்வாய்ப்பாக லாரியில் பயணித்த 4 பேரும் உயிர் தப்பினர்...
மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை... தப்பியோடிய குற்றவாளிகளை தேடும் காவல் துறையினர்...
பிகாரில் தேர்தல் பரப்புரையை தொடங்கினார் பிரசாந்த் கிஷோர்... தேஜஸ்வி யாதவுக்கு எதிராக ராகோபூர் தொகுதியில் களம் இறங்கலாம் என எதிர்பார்ப்பு...
ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களை அனுமதிக்காத விவகாரம்... ராகுல் காந்தி கண்டனம்; அரசுக்கு தொடர்பில்லை என வெளியுறவு அமைச்சகம் விளக்கம்...
போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததால் காஸாவுக்கு திரும்பும் பாலஸ்தீனர்கள்... காஸாவை நிர்வகிக்கப்போவது யார் என்பதில் நிலவும் குழப்பம்...
பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக வலுக்கிறது போராட்டம்... காஸாவிற்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நகர்வுகளுக்கு துணைபோவதாக போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டு...
அமெரிக்காவில் பிரபல பாப் பாடகி பில்லி ஐலிஷை தடுமாறவைத்த ரசிகர்... இசை நிகழ்ச்சியின்போது கையைப் பிடித்து இழுத்ததால் பரபரப்பு...
2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 518 ரன்களை குவித்து டிக்ளேர்... 140 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறும் வெஸ்ட் இண்டீஸ் அணி...
டி20 போட்டியில் வலிமையான தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி சாதனை படைத்தது நமீபியா... கடைசி பந்தில் பவுண்டரி விளாசி வெற்றியை வசமாக்கினார் நமீபிய வீரர் ஸேன் க்ரீன்...