இந்தியா

’ஒரு ரூபாய் ஆசாமி’ : கர்நாடகாவில் ஆதரவற்ற மனிதரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற 3000 மக்கள்

’ஒரு ரூபாய் ஆசாமி’ : கர்நாடகாவில் ஆதரவற்ற மனிதரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற 3000 மக்கள்

EllusamyKarthik

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஹடகலி நகரத்தில் சாலை விபத்தில் படுகாயமடைந்து, உயிரிழந்த ஆதரவற்ற மனிதரின் இறுதி ஊர்வலத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர். இறந்து போன ஆதரவற்ற மனிதரின் பெயர் பசவா என தெரிவித்துள்ளனர் உள்ளூர் மக்கள். 

45 வயதான அவர் மனநிலை பாதிப்புடன் வாழ்ந்து வந்துள்ளார். அவரது பின்புலம் குறித்து யாருக்கும் தெரியவில்லை. அவர் நீண்ட ஆண்டுகளாக ஹடகலி நகரில் வசித்து வந்துள்ளார். பொது மக்களிடம் ஒரு ரூபாய் மட்டுமே யாசகமாக கேட்டு பெறுவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார் அவர். அதற்கு மேல் ஒரு பைசா கூட வாங்க மறுத்து விடுவாராம். கூடுதலாக கொடுத்தாலும் அதற்கான சில்லறையை சரியாக அவர்களிடமே கொடுத்து விடுவாராம். 

இந்நிலையில், அவர் சாலை விபத்தில் மரணம் அடைந்த செய்தியை கேட்ட மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர். மனிதத்துவத்திற்கு உதாரணமாக இந்த சம்பவம் அமைந்துள்ளது. 

அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் என உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.