காஷ்மீர் மாநிலத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
இதில் ஜம்மு மாவட்டத்தில் மட்டும் 659 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் டெங்கு அறிகுறிகள் உள்ளோருக்கு ரத்தப் பரிசோதனை செய்ய போதிய வசதிகள் இல்லை என்று ஜம்மு பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் டெங்கு பரிசோதனை வசதிகளை அதிகரிக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், அதைக் கட்டுப்படுத்த பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.