இந்தியா

‘50 ஆண்டுகளாக இழுக்கும் 1000க்கும் மேலான வழக்குகள்’ - தலைமை நீதிபதி

‘50 ஆண்டுகளாக இழுக்கும் 1000க்கும் மேலான வழக்குகள்’ - தலைமை நீதிபதி

webteam

நீதிமன்றங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் 50 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருப்பதாக நாட்டின் தலைமை நீதிபதி ரஞ்சன் ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார். 

அசாம் மாநிலம் கவுகாத்தி நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கொகோய், 25 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 20 லட்சம் வழக்குகள் நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதாகக் கூறினார். நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க நீதிபதிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 90 லட்சத்துக்கு மேல் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் சம்மன் கூட இன்னும் அனுப்பப்படாத நிலை இருப்பதாகவும் தலைமை நீதிபதி வேதனை தெரிவித்தார்.