ஓடிசாவில் உள்ள கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட பாம்பு குட்டிகளை வனத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
ஓடிசா மாநிலம் பைகசாகி கிராமத்தில் ஒரு வீட்டில் ஏராளமான பாம்புகள் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பாம்பு பிடிக்கும் நபருடன் வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். சுமார் 5மணி நேர தேடுதலுக்கு பிறகு வீட்டில் இருந்த சுமார் 100க்கும் மேற்பட்ட பாம்பு குட்டிகளை,நன்கு வளர்ந்திருந்த இரு ராஜநாகங்களையும் பிடித்தனர். மேலும் 20 பாம்பு முட்டைகளையும் கைப்பற்றினர்.
இதுகுறித்து பேசிய வனத்துறை அதிகாரிகள், இந்த கிராமத்தில் இருந்த ஒரு கூலித் தொழிலாளியின் மண் வீட்டில் பாம்புகள் இருந்துள்ளது. இதுதொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சுமார் 100க்கும் மேற்பட்ட பாம்பு குட்டிகளை, இரு ராஜநாகங்களையும் பிடித்துள்ளோம். இதனை அருகில் உள்ள உயிரியல் பூங்காவில் விடவுள்ளோம். அந்த வீட்டின் உரிமையாளர்கள் பாம்பிற்கு பால் ஊற்றி வழிபாடுகள் மேற்கொண்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.