இந்தியா

வலிமைபெறும் வான்படை: மேலும் 3 ரஃபேல் போர்விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைகிறது !

வலிமைபெறும் வான்படை: மேலும் 3 ரஃபேல் போர்விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைகிறது !

Veeramani

சீனவுடனான எல்லை பதற்றம் அதிகரித்துவரும் நிலையில் மேலும் மூன்று ரஃபேல் போர்விமானங்கள் இந்திய விமானப் படையில் இணையவுள்ளது.

கிழக்கு லடாக்கில் சீனாவுக்கும் இந்தியாவுக்குமான எல்லையில் பதட்டம் நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில், நவம்பர் 5 ஆம் தேதி இந்தியா மேலும் மூன்று ரஃபேல் போர் விமானங்களை பெற உள்ளது. பிரெஞ்சு நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் உருவாக்கிய  17 ரஃபேல் போர் விமானங்களை ஜூலை 29 மற்றும்  செப்டம்பர் 10 ஆம் தேதிகளில் இந்தியா பெற்று  அம்பலா விமான தளத்தில்  உள்ள  விமானப் படையில்  இணைத்தது.

மொத்தம் 59,000 கோடி ரூபாய்  செலவில் 36  ரஃபேல்  ஜெட்  விமானங்களை வாங்க இந்தியா  மற்றும் பிரான்ஸ்  அரசாங்கங்களுக்கு  இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 4.5 ஜெனரேசன் விமானங்களில் ஹேமர் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து  ரஃபேல் ஜெட் விமானங்கள்  வான்படையில் சேர்க்கப்பட்ட பின்னர், பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் " இது முழு உலகிற்கும் ஒரு பெரிய மற்றும் கடுமையான செய்தி, குறிப்பாக நமது இறையாண்மையில் கண்வைத்திருப்பவர்களுக்கு" என்று அறிவித்தார். இந்தியா ஜனவரியில் மேலும் மூன்று ரஃபேல் விமானங்களையும், மார்ச் மாதத்தில் மேலும் மூன்று ரஃபேல்களையும், ஏப்ரல் மாதத்தில்  மேலும் ஏழு ஏவுகணைகளையும்  பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.