இந்தியா

மாதாந்திர பூஜை: 17 முதல் 22 ஆம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

webteam

தமிழ் மாதத்தின் ஐப்பசி மற்றும் மலையாள துலாம் மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (அக்டோபர் 17 ஆம் தேதி) மாலை திறக்கப்படுகிறது.

உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, மலையாள துலாம் மாதம் மற்றும் தமிழ் மாதத்தின் ஐப்பசி மாத பூஜைக்காக இன்று (அக்டோபர் 17ம் தேதி) மாலை திறக்கப்படுகிறது. அக்டோபர் 22 ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடை திறந்திருக்கும்.

சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபம் ஏற்றுகிறார். இதையடுத்து சபரிமலை தரிசனத்திற்காக 'வெர்ச்சுவல் கியூ' மூலம் ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பக்தர்களின் தரிசனம் முடிந்து அக்டோபர் 22 ஆம் தேதி இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். தற்போது மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவும் நடந்து வருகிறது.