நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரை செப்டம்பர் 14ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 18 அமர்வுகள் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலுக்குப் பின்னர் கூடவுள்ள முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் என்பதால், மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சமூக இடைவெளியுடன் மக்களவை மற்றும் மாநிலங்களை ஆகிய இரு அவைகளும் நடைபெறும் எனப்படுகிறது.