இந்தியா

ரூ.1 லட்சம் வைத்திருந்த துண்டை உணவுப்பொட்டலம் என நினைத்து தூக்கிச்சென்ற குரங்கு

JustinDurai
ரூ.1 லட்­சம் ரொக்­கப் பணத்தை முடிச்சுப்போட்டு வைத்திருந்த துண்டை உணவுப்பொட்டலம் என நினைத்து குரங்கு ஒன்று தூக்கிச்சென்ற சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
மத்தியப் பிர­தேச மாநி­லத்­தின் ஜபல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்­த­ ஒருவர், தனது துண்டில் ரூ.1 லட்­சம் ரொக்­கப் பணத்தை முடிச்சுப்போட்டு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்­போது அவரை நெருங்­கிய குரங்கு ஒன்று அவ­ரி­ட­மி­ருந்து துண்டை பறித்­துச் சென்று அரு­கி­லி­ருந்து மரத்­தின் மீது வேக­மாக ஏறி உட்­கார்ந்து கொண்­டது. பத­றிப்­போன அந்நபர் பணத்­தைத் தந்­து­வி­டு­மாறு குரங்கை நோக்­கிக் கெஞ்­சத் தொடங்­கி­னார்.
துண்டில் உணவு இருப்பதாக நினைத்த குரங்கு அதை அவிழ்த்துப் பார்த்தபோது அதிலிருந்த ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் சாலையில் விழுந்தன. இதில் 56,000 ரூபாயை மட்டுமே மீட்க முடிந்ததாகவும் மீதி பணம் தொலைந்து விட்டதாகவும் காவல் நிலையத்தில் அந்த நபர் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மஜோலி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.