ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் உலகிலேயே மிகக்குறைந்த விலையில் ரூ.251 -க்கு ஸ்மார்ட்போன்களை விற்பனைக்கு கொண்டு வருவதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் அந்நிறுவன தலைவர் மோஹித் கோயல் மோசடி வழக்கில் கைது செய்யபட்டுள்ளார்.
ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் தலைவர் மோஹித் கோயல் மோசடி செய்தாக அயாம் என்டெர்பிரைசஸ் எனும் நிறுவனம் வழக்கு தொடுத்தது. ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் தங்கள் நிறுவனத்திடம் ரூ.16 லட்சம் மோசடி செய்தாக புகார் மனுவில் அயாம் என்டெர்பிரைசஸ் நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. இந்த புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள கோயல் கைது செய்யப்பட்டுள்ளதாக காசியாபாத் காவல் துறை துணை கண்காணிப்பாளர் மனிஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.