இந்தியா

இந்தியாவின் இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கு நடிகர் மோகன்லால் போனில் வாழ்த்து!

இந்தியாவின் இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கு நடிகர் மோகன்லால் போனில் வாழ்த்து!

sharpana

இந்தியாவின் இளம் மேயராக பதவியேற்கவுள்ள ஆர்யா ராஜேந்திரனுக்கு நடிகர் மோகன்லால் போனில் தொடர்புகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக, முடவன்முகல் வார்டு கவுன்சிலர் 21 வயதே ஆன ஆர்யா ராஜேந்திரனை புதிய மேயராக அறிவித்துள்ளது சிபிஎம் கட்சி. இதற்கு, அக்கட்சியினர் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகர் மோகன்லால் ஆர்யாவை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தற்போது, மோகன்லால் கொச்சியில் வசித்து வந்தாலும் அவருக்கு ஓட்டுரிமை மட்டுமல்லாமல் வீடும் ஆர்யா வார்டு கவுன்சிலர் ஆன முடவன்முகல் பகுதியில்தான் இருக்கிறது.

ஆர்யாவை இன்று தொலைபேசியில் அழைத்த மோகன்லால். ”உங்கள் பயணத்திற்கு வாழ்த்துகள். திருவனந்தபுரம் மிகவும் பிடித்த நகரம். அதனை இன்னும் அழகாக மாற்றவேண்டிய நேரம் இது. முடவன்முகலில் இருக்கும்போது கண்டிப்பாக உங்களை சந்திக்கிறேன்” என்று ஊக்கப்படுத்தி வாழ்த்தியுள்ளார். அதற்கு, நன்றி தெரிவித்த ஆர்யா என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன் என்று உறுதி அளித்துள்ளார்.