இந்தியா

எதிர்ப்பையும் மீறி தேசியக் கொடியேற்றினார் மோகன் பகவத்

எதிர்ப்பையும் மீறி தேசியக் கொடியேற்றினார் மோகன் பகவத்

Rasus

கேரளாவில் மாநில அரசின் எதிர்ப்பையும் மீறி ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பாலக்காட்டில் உள்ள பள்ளி ஒன்றில் தேசியக் கொடியை ஏற்றியுள்ளார்.

ஜனவரி 26ம் தேதி குடியரசு தின கொண்டாட்டட்டத்தின் போது ஒவ்வொரு பள்ளியிலும் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மட்டுமே தேசிய கொடியினை ஏற்ற வேண்டும் என கேரள மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கும் அரசு சார்பில் சுற்றறிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மாநில அரசு வருடந்தோறும் ஒவ்வொரு குடியரசு மற்றும் சுதந்திர தின விழாவையொட்டி இந்த சுற்றறிக்கையை அனுப்புவது வழக்கம்தான்.

இந்நிலையில் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள பள்ளி ஒன்றில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தேசியக் கொடி ஏற்றி வைத்துள்ளார். கேரள அரசின் எதிர்ப்பையும் மீறி மோகன் பகவத் தேசியக் கொடி ஏற்றியுள்ளார். கடந்த சுதந்திர தினத்தன்று போதும் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மோகன் பகவத் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இது அப்போது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இந்த விவகாரத்தில் பாலக்காடு ஆட்சியர் அப்பள்ளிக்கு மெமோவும் அனுப்பியிருந்தார். அந்த சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் கேரளாவில் உள்ள பள்ளி ஒன்றில் குடியரசு தினத்தன்று மோகன் பகவத் தேசியக் கொடி ஏற்றி வைத்துள்ளார்.