இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தனது மகளின் நடன வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவரது மனைவி ஹசின் ஜஹான். இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த பிரச்னை ஒரு பக்கம் இருந்தாலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அசத்தி வருகிறார் ஷமி. முதல் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் அள்ளிய ஷமி, இப்போது நடக்கும் இரண்டாவது டெஸ்ட்டில் ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் தனது மகள் அயிரா, போஜ்புரி பட பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் ஷமி. ‘எனது பொம்மை. அவரது அப்பாவை விட எவ்வளவு சிறப்பாக ஆடுகிறார்’ என்று அதில் குறிப்பிட் டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏராளமானோர் ஷமி மகளை பாராட்டி வருகின் றனர்.