இந்தியா

புரட்டி போட்ட மழை: நதிநீர் இணைப்பு பணிகளை ஒருமாதத்தில் தொடங்க மத்திய அரசு திட்டம்

புரட்டி போட்ட மழை: நதிநீர் இணைப்பு பணிகளை ஒருமாதத்தில் தொடங்க மத்திய அரசு திட்டம்

rajakannan

நாட்டில் கடுமையான வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது என்ற நிலை சில மாதங்களுக்கு முன்பு இருந்தது. 

ஆனால் அதற்கு மாறாக வட இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாக பேய் மழை கொட்டி வருகிறது. இதனால் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பீகார், அசாம் உள்ளிட்ட மாநிலங்கள் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

இவ்வளவு மழை பெய்த போது அடுத்த ஆண்டு கோடை காலத்தில் வறட்சி ஏற்படாது என்பதை உறுதி செய்ய முடியாத நிலையே உள்ளது. ஏனெனில் மழை நீரை சேகரிப்பதற்கான போதிய ஏற்பாடுகள் நாட்டில் இல்லை. பெரும்பாலான மழைநீர் கடலிலே கலந்து வீணாகிறது. 

இந்நிலையில் தற்போது பெய்த கனமழையை தொடர்ந்து 5.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நதிநீர் இணைப்பு திட்டத்தை விரைவில் கையில் எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பிரதமர் மோடியின் உத்தரவை அடுத்து முதல் கட்ட பணிக்கான திட்டத்துக்கு அனைத்துவிதமான ஒப்புதல்களும் பெறப்பட்டுள்ளன. இதனையடுத்து அடுத்த ஒரு மாதத்திற்குள் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிகிறது.

நதிநீர் இணைப்பு திட்டம் கடந்த 2002 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசால் பரிந்துரை செய்யப்பட்டது.