இந்தியா

தொழில் தொடங்க வழிகளை எளிமையாக்குங்கள்: மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தொழில் தொடங்க வழிகளை எளிமையாக்குங்கள்: மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

webteam

தொழில் தொடங்க எளிமையான நடைமுறைகளை ஏற்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு மாநில அரசுகளை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். 

மாநில தலைமைச் செயலர்கள் மற்றும் உயரதிகாரிகளைச் சந்தித்தபோது இதை அவர் தெரிவித்தார். எளிதாக தொழில் தொடங்க வழிகளை ஏற்படுத்தினால் அதிக முதலீடுகளைக் கவர்வதன் மூலம் மாநிலத்தை விரைவாக வளர்ச்சி பெறச் செய்யலாம் என்று மோடி அறிவுறுத்தினார். ஒட்டுமொத்த உலகமும் இப்போது இந்தியாவுடன கூட்டு சேர விரும்புவதாகவும், இது நம்நாட்டுக்கு அருமையான வாய்ப்பு என்றும் பிரதமர் தெரிவித்தார். ஊழலை ஒழிக்கவும், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் ஆதார் எண்ணை அதிகபட்சம் பயன்படுத்துமாறும் மாநில அரசுகளை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.