இந்தியா

வாஜ்பாய்க்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து

வாஜ்பாய்க்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து

webteam

பாஜக மூத்த தலைவர் வாஜ்பாய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “எங்கள் அன்பான அடல் ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது தனித்துவம் மற்றும் தொலைநோக்குத் தலைமை  உலக அரங்கில் இந்தியாவின் கௌரவத்தை உயர்த்தியது. அவரது ஆரோக்கியத்திற்காக நான் பிரார்த்திக்கிறேன்” என கூறியுள்ளார்.

வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு உத்தரப் பிரதேச மாநில அரசு 93 கைதிகளை விடுதலை செய்ய உள்ளது. இவர்கள் அனைவரும் தண்டனை காலத்தை பூர்த்தி செய்தவர்கள் என்றும், ஆனால் நீதிமன்றத் தீர்ப்பின்படி அபராத தொகை செலுத்த இயலாமல் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.