இந்தியா

சொந்தத் தொகுதியான வாரணாசி செல்கிறார் மோடி

சொந்தத் தொகுதியான வாரணாசி செல்கிறார் மோடி

webteam

உள்கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்கி வைக்க தனது சொந்தத் தொகுதியான வாரணாசிக்கு பிரதமர் மோடி இன்று செல்கிறார். 

வாரணாசி, பிரதமர் மோடியின் சொந்தத் தொகுதி என்பதால், பொதுவாக அங்கு நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பார். இந்நிலையில் 2 நாட்கள் பயணமாக மோடி வாரணாசி செல்கிறார். இந்தப் பயணத்தின் போது, மேம்பாலங்கள் திறப்பு, விவசாயிகள் பொதுக்கூட்டம், பாஜக உறுப்பினர்கள் கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவுள்ளார்.

பிரதமரின் வருகையையொட்டி, வாரணாசி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக வர்த்தக மையத்தின் நெசவுத் திட்டங்கள் தொடக்க விழா மற்றும் வாரணாசி-வதோதரா இடையேயான ரயில் சேவை தொடக்க விழா உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சிகளை தொடர்ந்து காசி விஸ்வநாதர் ஆலயத்தின் சமபந்தி கூடத்தை திறந்து வைக்கும் மோடி, அங்கு மக்களுடன் அமர்ந்து சமபந்தி உண்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.