இந்தியா

மூன்று ஆண்டுகளில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்ட நாடுகள் எத்தனை தெரியுமா?

மூன்று ஆண்டுகளில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்ட நாடுகள் எத்தனை தெரியுமா?

webteam

பிரதமர் மோடி, கடந்த மூன்று ஆண்டுகளில் 49 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங், பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களின்போது பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தானதாகத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி பதவியேற்ற 2014ம் ஆண்டில் இரண்டாவது பாதியில் மட்டும் பூடான் உள்பட 8 நாடுகளுக்கு சென்றதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நடப்பு ஆண்டின் முதல் 7 மாதங்களில் பிரதமர் மோடி 10 வெளிநாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டதாகவும் வி.கே.சிங், தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.