இந்தியா

"கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்தியா துணை நிற்கும்" - பிரதமர் மோடி

webteam

கொரோனா வைரஸிலிருந்து மனித குலத்தை காக்கும் யுத்தத்தில் இந்தியா உறுதியாக துணை நிற்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மருந்துகளை தயாரிக்க பயன்படும் 24 மூலப்பொருட்களின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் கொரோனாவை குணப்படுத்தும் என நம்பப்படும் மலேரியாவுக்கான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை உலக நாடுகளுக்கு அளிக்க இந்தியா முன்வந்துள்ளது. இதற்கு அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் நன்றி தெரிவித்த நிலையில், பிரேசில் அதிபர், இஸ்ரேல் பிரதமர் ஆகியோரும் மோடியின் நடவடிக்கையை ட்விட்டரில் பாராட்டியுள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள மோடி, அனைவரும் கொரோனாவை எதிர்த்து போராட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா விவகாரத்தில், உலக நாடுகளுக்கு இந்தியா இயன்ற உதவியை செய்யும் எனவும் மோடி கூறியுள்ளார்.