உத்தரப் பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் கோயில் கட்டப்போவதாக அவரது தீவிர ஆதரவாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர் ஜே.பி.சிங். ஓய்வுபெற்ற பொறியாளரான இவர் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளர். மீரட்டில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் சுமார் 30 கோடி செலவில் நரேந்திர மோடியின் பெயரில் கோயிலை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளதாக ஜே.பி.சிங் கூறியிருக்கிறார். கோயிலில் நூறு அடி உயரம் கொண்ட மோடியின் சிலை ஒன்று நிறுவப்பட உள்ளதாகவும், இதற்கான பூமி பூஜை இம்மாதம் 23ஆம் தேதி நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். கோவிலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைய இரண்டு ஆண்டுகள் ஆகும் என அவர் தெரிவித்துள்ளார். மோடியின் கொள்கைகள் தனக்கு பிடித்திருப்பதாகவும், அரசுப் பணியில் இருந்ததால் தன்னால் அவருக்கு எதுவும் செய்ய இயலவில்லை எனவும் ஜே.பி.சிங் தெரிவித்துள்ளார்.