இந்தியா

மோடி சிலைக்கு ஹெலிகாப்டரிலிருந்து பூ மழை

மோடி சிலைக்கு ஹெலிகாப்டரிலிருந்து பூ மழை

webteam

பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்றுள்ளார். அவரை வரவேற்கும் விதத்தில் 11 கிலோ மீட்டர் தொலைவு வரை நடைபெற்ற இருச்சக்கர வாகன பேரணியை அவர் பார்வையிட்டார். பிரதமர் வருகைக்கு முன்னதாக, சூரத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது உருவச் சிலைக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்பட்டன.

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் பாரதிய ஜனதா பெற்ற வெற்றிக்கு பின் முதல்முறையாக சொந்த மாநிலத்திற்கு சென்ற மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமரின் தூய்மை இந்தியா உள்ளிட்ட திட்ட‌ங்களை நினைவூட்டும் வகையில் நகரெங்கும் மண் சிற்பங்களும் அமைக்கப்பட்டிருந்தன. குஜராத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மோடியின் இப்பயணம் அமைந்துள்ளது. கடந்த 9 மாதங்களில் அவர் 8 முறை குஜராத் சென்றுள்ளார்.