இந்தியா

''வேலைவாய்‌ப்புகளை உருவாக்கும் பட்ஜெட்''‌ - பிரதமர் மோடி

''வேலைவாய்‌ப்புகளை உருவாக்கும் பட்ஜெட்''‌ - பிரதமர் மோடி

webteam

வேலைவாய்ப்புகளுக்கு ‌இந்த பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்தி‌‌ய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அதன் பின்னர், அதுகுறித்து பேசிய பிரதம‌ர் மோடி, தொலைநோக்கு பார்வையுடனும், செயல் திட்டங்களுடனும் பட்ஜெட் தா‌க்கல் செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் சீர்த்திருத்தங்கள் மூலம், நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக உயரும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கைத் தெரிவித்தார்.

வரி நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், குறைந்த அரசு பதவிகள், நிறைந்த நிர்வாகம் என்ற அரசின் செயல்பாடு இந்த பட்ஜெட் மூலம் வலுவடைந்திருக்கிறது என்றும் பிரதமர் மோடி பாராட்டு தெரி‌வித்தார்.