இந்தியா

"உலகின் மிகப் பெரிய வரி சீர்திருத்தம் ஜிஎஸ்டி" : மோடி

webteam

உலகின் மிகப் பெரிய வரிச் சீர்திருத்தமாக ஜிஎஸ்டி பாராட்டப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் தனது கருத்துக்களை மக்களுடன் பகிர்ந்து கொள்வதை பிரதமர் வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வரிசையில் 45ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் இன்று அவர் பேசும்போது, ஜிஎஸ்டி குறித்து குறிப்பிட்டார். மக்கள் ஏற்றுக் கொண்டு, ஒரே ஆண்டில் வெற்றி பெற்றிருப்பதால் ஜிஎஸ்டி உலகின் மிகப் பெரிய வரிச் சீர்திருத்தமாக பாராட்டப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். ஏழை, நடுத்தர மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். அந்த திட்டங்களின் செயல்பாடு குறித்து பயனாளிகளுடன் கடந்த சில நாட்களாக கலந்துரையாடியதாக கூறியுள்ள பிரதமர் மோடி, பயனாளிகளின் அனுபவங்கள் மற்றும் வாழ்க்கை மாற்றத்தில் இருந்து நிறைய கற்றுக் கொண்டதாகவும் கூறினார்.