PMModi
PMModi pt web
இந்தியா

“பாஜக ஆதரவு ஆட்சியில்தான் பாபா சாகேப்பிற்கு பாரதரத்னா வழங்கப்பட்டது” - பிரதமர் மோடி

Angeshwar G

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இம்மாதத்தின் 1 ஆம் தேதியில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 9 ஆம் தேதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எப்படி இருந்த காங்கிரஸ் இப்படி ஆகிவிட்டது: பிரதமர் மோடி

இந்நிலையில், இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரைக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன். ஜனாதிபதி தனது உரையில் இந்தியாவின் ஆற்றல், வலிமை மற்றும் ஒளிமயமான எதிர்காலம் குறித்து பேசினார். கார்கேவிற்கு நான் எனது சிறப்பான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மக்களவையில் நாங்கள் தவறவிட்ட பொழுதுபோக்கினை அவர் பூர்த்தி செய்தார்.

வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 40 இடங்களில் கூட வெற்றி பெறாது. உங்கள் ஒவ்வொரு வார்த்தையையும் நாங்கள் பொறுமையுடன் பணிவுடனும் கேட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால் இன்றும் கேட்கக்கூடாது என்று தயாராக வந்துள்ளீர்கள். உங்களால் என் குரலை அடக்க முடியாது. இந்த குரலுக்கு நாட்டு மக்கள் பலம் கொடுத்துள்ளார்கள், அதன் காரணமாகவே நான் இம்முறை முழுமையாக தயாராக வந்துள்ளேன்.

பாஜக 400 இடங்களில் ஜெயிக்க மல்லிகார்ஜுன கார்கே ஆசிர்வாதம் வழங்கியுள்ளார்: பிரதமர் மோடி

தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களை வெல்ல கார்கே ஆசிர்வதித்துள்ளார். மேற்கு வங்கமோ காங்கிரஸ் 40 இடங்களை தாண்ட முடியாது என சவால் விடுத்துள்ளது. காங்கிரஸ் 40 இடங்களை கைப்பற்றும் என நம்புகிறேன்.

எஸ்சி/எஸ்டி மற்றும் ஓபிசிக்கு அதிக பங்களிப்பை வழங்குவதில் காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் எப்போதுமே சிரமப்படுகின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது பாபாசாகேப் அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்க எந்த ஒரு ஆயத்தப்பணியும் மேற்கொள்ளப்படவில்லை. பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைத்தபோதே பாபாசாகேப்பிற்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது.

எப்படி இருந்த காங்கிரஸ் இப்படி ஆகிவிட்டது: பிரதமர் மோடி

ஒரு தேசம் என்பது ஒரு துண்டு நிலம் மட்டுமல்ல. நாட்டின் எந்தப்பகுதியும் வளர்ச்சியில்லாமல், இந்தியா வளர்ச்சி அடையாது. ஆனால், இன்று அரசியல் ஆதாயங்களுக்காக நாட்டை உடைக்கும் மொழிகள் பேசப்பட்டு வருகின்றன” என தெரிவித்தார்.