நாய் போல விசுவாசம் காட்டும் பரம்பரையில் நாங்கள் வளர்க்கப்படவில்லை என பிரதமர் மோடி காங்கிரஸ் மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்திருக்கிறார்.
நேற்று நாடாளுமன்ற மக்களவையில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் மல்லிகார்ஜூன கார்கே, “காங்கிரசில் இருந்து இந்த தேசத்தின் ஒற்றுமைக்காக காந்தி, இந்திரா போன்றவர்கள் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள். உங்கள் பாஜகவில் இருந்து யார் அப்படி இருக்கிறார்கள்.ஒரு நாய் கூட இல்லை” என்று கூறியிருந்தார்.இந்த நிலையில் மக்களவையில் இன்று இதற்கு பதிலடி கொடுத்த மோடி, நாய் போல விசுவாசம் காட்டும் பரம்பரையில் நாங்கள் வளர்க்கப்படவில்லை என்றார்.
சுதந்திரப் போராட்டத்தில் பகத்சிங், அசாத் போன்றவர்களின் பங்களிப்பைப் பற்றி எல்லாம் காங்கிரஸ் ஒரு போதும் பேசுவதில்லை.அவர்கள் ஒரே ஒரு குடும்பம் மட்டும்தான் சுதந்திரத்தை நமக்கு வாங்கிக் கொடுத்ததாக நினைக்கிறார்கள் என்று கூறினார்.தன்னைப் போன்று இந்த தேசத்திற்காக உயிரைக் கொடுக்க முடியாத பலர் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்ட மோடி, ஆனால் தாங்கள் இந்தியாவிற்கு சேவை செய்வதற்காக வாழ்வதாகத் தெரிவித்தார்.