modi speech in g20 summit south africa web
இந்தியா

ஜி20 மாநாடு | 3 செயல்திட்டங்களை முன்மொழிந்த மோடி!

உலகம் முழுவதும் சமநிலை வளர்ச்சி பெற தேவையான மூன்று முக்கிய முன்மொழிவுகளை ஜோஹன்ஸ்பெர்க் G20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி வெளியிட்டார்.

PT WEB

தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்ஸ்பெர்கில் நடைபெற்ற G20 உச்சிமாநாட்டின் முதல் அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். ஒற்றுமைமிக்க மற்றும் நிலையான வளர்ச்சி என்பதே இந்த அமர்வின் முக்கிய கருத்தாக இருந்தது. ஆப்பிரிக்கா கண்டம் முதல்முறையாக G20 மாநாட்டை நடத்தும் நிலையில், தற்போதைய வளர்ச்சி அளவுகோல்களை மீண்டும் பரிசீலிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

அனைத்து நாடுகளுக்கும் சமமான பயனளிக்கும் வளர்ச்சி முறைமை தேவைப்படுவதாகவும், இந்திய நாகரிக மதிப்புகள், குறிப்பாக அனைவரையும் உள்ளடக்கிய மனிதம், உலகளாவிய வளர்ச்சிக்கான வழிகாட்டியாக முடியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர் 3 செயல்திட்டங்களை முன்மொழிந்து பேசினார்.. கூட்டுத் தயாரிப்பை அடிப்படையாகக் கொண்டு, முதலாவது முன்மொழிவாக, பாரம்பரிய மருத்துவ மற்றும் அறிவு மரபுகளைப் பாதுகாப்பதற்கு உலகளாவிய சேமிப்பகம் அமைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

modi speech in g20 summit south africa

அடுத்து, ஆப்பிரிக்கா கண்டத்தின் முன்னேற்றம் உலக முன்னேற்றத்திற்கும் அடிப்படை என வலியுறுத்திய பிரதமர் மோடி, ஆப்பிரிக்கா திறன் மேம்பாடு உருவாக்கப்பட வேண்டும் என்றும், பெண்டனில் (FENTANYL) போன்ற ஆபத்தான மருந்துப் பொருட்களின் பரவல் மற்றும் அவற்றை ஆதரிக்கும் கட்டமைப்புகளை கட்டுப்படுத்த, போதைப்பொருள்-பயங்கரவாத இணைப்பை தடுக்கும் நடவடிக்கைகள் அவசியம் என பிரதமர் மோடி முன்மொழிந்தார்.