கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர்களை இழந்த சுகாதாரப் பணியாளர்களின் தகவல் மோடி அரசிடம் இல்லை. மோடி அரசு, கொரோனாவில் பணியாற்றிய ஊழியர்களை ஏன் இவ்வளவு அவமதித்தார்கள்? என்று காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள பதிவில் “கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர்களை இழந்த சுகாதாரப் பணியாளர்களின் தகவல் மோடி அரசிடம் இல்லை. தட்டு தட்டுவதை விட, விளக்கு ஏற்றி வைப்பதை விட மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பும் மரியாதையும் மிகவும் முக்கியம். மோடி அரசு, கொரோனாவில் பணியாற்றிய ஊழியர்களை ஏன் இவ்வளவு அவமதித்தார்கள்?” என்று கூறியுள்ளார்.