இந்தியா

வன்முறை எதிரொலி - டெல்லி விரைகிறார் பிரதமர் மோடி?

வன்முறை எதிரொலி - டெல்லி விரைகிறார் பிரதமர் மோடி?

webteam

டெல்லியில் ஏற்பட்ட வன்முறை காரணமாக பிரதமர் மோடி அங்கு விரைந்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வந்தது. இதில் சில இடங்களில் சிஏஏவுக்கு எதிராகவும் சில இடங்களில் ஆதரவாகவும் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்தது. இதனால் துப்பாக்கிச்சூடு நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலீசார் கூட்டத்தை கலைத்தனர்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வந்துள்ள நிலையில், டெல்லியில் வன்முறை வெடித்துள்ளதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனிடையே டெல்லி வன்முறையை தடுக்க நடவடிக்கை எடுங்கள் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார். பல இடங்களில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் வன்முறையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், டெல்லி போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுத்து பிரதமர் மோடி டெல்லி விரைவதாக தகவல் வெளியாகியுள்ளது.