இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சிஐஐ ஆண்டு கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “கொரோனா பாதிப்பால் ஆன்லைன் நிகழ்ச்சிகள் புதிய முயற்சியாக இருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும். அதேநேரம் பொருளாதாரத்தையும் வலுப்படுத்த வேண்டும்.
கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா சென்று கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் ஏழை, எளிய மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் பெரும் உதவிகரமாக இருக்கின்றன” எனத் தெரிவித்தார்.