இந்தியாவின் எரிசக்தித் துறை சமநிலையற்றதாக நீடிப்பதாகவும், அதன் பல பிரிவுகளில் சீர்திருத்தங்கள் அவசியம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய எரிசக்திக் கொள்கையை உருவாக்குவது குறித்து ஆலோசனைகளை அளிக்க முன்வருமாறு நிபுணர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்திய பிறகு இந்த அறிக்கையை பிரதமர் அலுவலகம் வெளியிட்டது.