இந்தியா

கார்கில் பகுதியில் இணையதள சேவை தொடக்கம்?

கார்கில் பகுதியில் இணையதள சேவை தொடக்கம்?

jagadeesh

யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட 145 நாட்களுக்குப் பின்னர் லடாக்கில் உள்ள கார்கில் பகுதியில் இணையதள சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டதை அடுத்து இணையதள சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் யூனியன் பிரதேசமான லடாக்கில் உள்ள கார்கில் மாவட்டத்தில் இணையதள சேவை சுமார் நான்கரை மாதங்களுக்குப் பிறகு தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நடவடிக்கை லடாக் பகுதி மக்கள், நாட்டின் பிற பகுதிகளைப் போலவே அரசியலமைப்பு சலுகைகளைப் பெறவும் வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவ வாய்ப்புள்ளது.