இந்தியா

பாலியல் புகார் ஆசிரியருக்கு எதிராக போராடியவர்கள் மீது தடியடி

பாலியல் புகார் ஆசிரியருக்கு எதிராக போராடியவர்கள் மீது தடியடி

webteam

கொல்கத்தாவில் பள்ளிச் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தடியடி நடத்தப்பட்டதால்‌ பதட்டம் ஏற்பட்டது.

பள்ளிச் சிறுமிகள் மீது பள்ளி ஆசிரியர்களே பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் சம்பவம் வாடிக்கையாகிவிட்டது. தற்போது தெற்கு கொல்கத்தாவில் உள்ள பள்ளி ஒன்றிலும் அதேபோன்ற சம்பவம் ஒன்று அரங்க‌றியுள்ளது. பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டவர் ஐந்து வயது குழந்தை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி வளாகத்தின் முன்பாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் யார் என்று தெரிந்தும்‌ நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர். 

குழந்தையின் பெற்றோருக்கு ஆதரவாக அப்பகுதி மக்களும் போராட்டத்தில் குதித்ததால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது. பள்ளி நிர்வாகத்தை‌ தொடர்புக் கொள்ள பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், பள்ளி வளாகத்தின் உள்ளே சென்றபோது அவர்களை தடுத்து நிறுத்தி, காவல்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ‌வாக்குவாதம் தள்ளுமுள்ளாக மாறியதால், காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர். இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.