இந்தியா

பத்திரிகை ஆசிரியர்கள் கில்டில் இருந்து அக்பர், தேஜ்பால் சஸ்பெண்ட்!

பத்திரிகை ஆசிரியர்கள் கில்டில் இருந்து அக்பர், தேஜ்பால் சஸ்பெண்ட்!

webteam

பாலியல் புகாரில் சிக்கிய மத்திய முன்னாள் அமைச்சரும் பத்திரிகையாளருமான அக்பர், தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் ஆகியோரை பத்திரிகை ஆசிரியர்கள் கில்டு சஸ்பெண்ட் செய்துள்ளது.

மத்திய முன்னாள் அமைச்சர் எம்.ஜே.அக்பத், ’ஆசியன் ஏஜ்’ என்ற ஆங்கில பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றியவர். அவர் பணியாற்றிய காலகட்டத்தில் பெண் பத்திரிகையாளர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மீது புகார் எழுந்தது. ’மீ டு’ ஹேஷ்டேக்கில் பிரியா ரமணி என்ற பத்திரிகையாளர் உட்பட 15 பெண்கள் அவர் மீது பாலியல் புகார் கூறினர். இதனால் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

இதே போல தெஹல்காவின் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது பெண் பத்திரிகையாளர் தொடர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதுதொடர்பாக இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் கில்டின் (Editors Guild Of India) செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பின்னர் அவர்களை சஸ்பெண்ட் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.