இந்தியா

“மிஷன் கர்மயோகி”அரசு ஊழியர்களை தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது: பிரதமர் மோடி

Veeramani

அரசு ஊழியர்களை ஆக்கப்பூர்வமானவர்களாக மற்றும் புதுமையானவர்களாக மாற்றுவதன் மூலம் எதிர்காலத்திற்காக அவர்களை தயார்படுத்துவதே மிஷன் கர்மயோகி திட்டத்தின் நோக்கம் என்று  பிரதமர் மோடி கூறியுள்ளார். நாட்டின் அரசு ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டமாக இது இருக்கும் என்றும் கூறினார்.

அரசாங்கத்தின் மிகப்பெரிய மனிதவள மேம்பாட்டு சீர்திருத்தம் என்று அழைக்கப்படும்  "மிஷன் கர்மயோகி" திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை  ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின் கீழ்  ஒருங்கிணைந்த அரசாங்க ஆன்லைன் பயிற்சி தளமாக, கர்மயோகி திட்டம் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அரசு ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டமான மிஷன் கர்மயோகியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று பாராட்டினார். இது அரசாங்கத்தின் மனித வள மேலாண்மை நடைமுறைகளை "தீவிரமாக மேம்படுத்தும்" என்று கூறினார். மேலும் இத்திட்டம் சிவில் சர்வண்ட்ஸ் தொடர்ச்சியான கற்றலுக்கு மாறுவதற்கு உதவும், வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் அரசு ஊழியர்களை இன்னும் ஆக்கப்பூர்வமானவர்களாகவும், புதுமையானவர்களாகவும் மாற்றுவதன் மூலம் எதிர்காலத்திற்காக அவர்களை தயார்படுத்துவதே மிஷன் கர்மயோகி திட்டத்தின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.

இத்திட்டத்தின் மேலே பிரதம மந்திரி தலைமையில் ஒரு மனிதவள கவுன்சில் இருக்கும். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்கள்  குழுவும் இருக்கும். இது சிறந்த சிந்தனைத் தலைவர்களையும் (குறிப்பிடத்தக்க கல்வியாளர்கள் மற்றும் உலகளாவிய தலைவர்கள்) மற்றும் சிவில் சர்வீசஸ் தலைமையும் கொண்டிருக்கும். பிரிவு அதிகாரிகள் முதல் செயலாளர்கள் வரை அனைவருக்கும் இந்த திட்டம் மூலமாக பயனளிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.