இந்தியா

”காணாமல் போன பஞ்சாயத்து உறுப்பினரை கொன்றது நாங்கள்தான்” ஆடியோ வெளியிட்ட பயங்கரவாதிகள்

”காணாமல் போன பஞ்சாயத்து உறுப்பினரை கொன்றது நாங்கள்தான்” ஆடியோ வெளியிட்ட பயங்கரவாதிகள்

EllusamyKarthik

கடந்த 9 ஆம் தேதியன்று காஷ்மீரில் காணாமல் போன பஞ்சாயத்து உறுப்பினரான நிசார் அகமது பட் பயங்ரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பயங்ரவாதிகள் வெளியிட்ட ஆடியோவின் அடிப்படையில் போலீசார் அவரது இறப்பை உறுதி செய்துள்ளனர். 

காஷ்மீரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கான்மோ கிராமத்தைச் சேர்ந்தவர் நிசார் அகமது பட். பஞ்சாயத்து உறுப்பினரான அவர் அங்குள்ள ஷோபியன் பகுதியில் இருந்து காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

கடத்தப்பட்ட நிசார் ஜம்மு காஷ்மீர் பொது பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர். அவர் மீது 12 எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதிகள் வெளியிட்ட அந்த ஆடியோவின் உண்மை தன்மை குறித்தும் நாங்கள் விசாரித்து வருகிறோம் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

‘நிசார் அகமது பட் கொல்லப்பட்டு அடையாளம் தெரியாத இடத்தில் புதைக்க பட்டுள்ளார்’ என ஆடியோவில் பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளனர். 

கடந்த இரண்டு மாதங்களில் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் பயங்கரவாதிகளால் கடத்தி கொல்லப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.