இந்தியா

காணாமல் போன மாணவர் - கண்டுபிடித்தால் ரூ.10லட்சம் பரிசு

காணாமல் போன மாணவர் - கண்டுபிடித்தால் ரூ.10லட்சம் பரிசு

webteam

டெல்லியில் காணாமல் போன ஜே.என்.யு மாணவர் நஜீப் அகமதுவை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.10லட்சம் பரிசு வழங்கப்படும் என்று சி.பி.ஐ அறிவித்துள்ளது.

யூனியன் பிரதேசமான டெல்லியில் ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர் நஜீப் அகமது, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காணாமல் போனார். அதைதொடர்ந்து மாணவரது குடும்பத்தினர் அவரை கண்டுபிடித்து தரும்படி போலீசில் புகார் கொடுத்தனர். டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவரை தேடி வந்தனர். 
இதற்கிடையே, தனது மகனை கண்டுபிடிப்பதில் டெல்லி போலீசார் விரைவாக செயல்படுவதில்லை எனக்கூறி மாணவரின் தாயார், டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் இந்த வழக்கை  சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதைதொடர்ந்து மாணவர் நஜீப் அகமது காணாமல் போன வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் காணாமல் போன ஜே.என்.யு மாணவர் நஜீப் அகமதுவை கண்டுபிடிப்பவர்களுக்கு அல்லது அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து தகவல் தருபவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என சி.பி.ஐ தெரிவித்துள்ளது.