சத்தீஸ்கரைச் சேர்ந்த இளம் பத்திரிகையாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யூடியூப் சேனல் நடத்தி வரும் பிஜாப்பூரைச் சேர்ந்த முகேஷ் சந்திரசேகர் நேற்று முன்தினம் மாயமானார். புகாரின் பேரில் அவரை காவல் துறையினர் தேடியபோது, ஒப்பந்ததாரர் ஒருவரின் வீட்டின் அருகே செப்டிங் டேங்கில் சடலமாக மீட்கப்பட்டார்.
ஒப்பந்ததாரரின் முறைகேடுகள் குறித்து செய்தி வெளியிட்டதால் இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவித்த காவல் துறையினர், முகேஷின் உறவினர்கள் இருவருக்கு இவர் மரணத்தில் தொடர்பிருக்கலாம் என சந்தேகிப்பதாகக் கூறியுள்ளனர்.