இந்தியா

மிஸ் இந்தியா ஃபைனலில் தேர்வான ஐஸ்வர்யா ஷெயோரன்.. யுபிஎஸ்சி தரவரிசையில் 93வது இடம்

மிஸ் இந்தியா ஃபைனலில் தேர்வான ஐஸ்வர்யா ஷெயோரன்.. யுபிஎஸ்சி தரவரிசையில் 93வது இடம்

Sinekadhara

2019ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான முடிவுகளை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நேற்று (ஆகஸ்ட் 4ஆம் தேதி) வெளியிட்டது. இதில் வெற்றிபெற்றவர்களின் பிண்ணனிகள் மற்றும் வெற்றிக்கதைகள் சோஷியல் மீடியாக்களில் வலம்வந்துகொண்டிருக்க, ஒரு நபர் ஒரு சிறந்த காரணத்திற்காக நெட்டிசன்களை கவர்ந்திருக்கிறார்.

அகில இந்திய தரவரிசையில் 93வது இடத்தை பிடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ஷெயோரன். ஐஸ்வர்யா ராய் என தனது தாயாரால் பெயரிடப்பட்ட இவரின் கதை சுவாரஸ்யமானது. இவர் 2016ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வானவர்.

ஐஸ்வர்யா ஷெயோரன், ஃபெமினா மிஸ் இந்தியா ஃபைனலிஸ்ட், கேம்பஸ் ப்ரின்ஸஸ் டெல்லி 2016, ஃப்ரெஷ்ஃபேஸ் வின்னர் டெல்லி 2015 என மாடலிங்கில் தனது வெற்றிகளைத் தொடர்ந்து சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 93 தரவரிசையில் வெற்றி பெற்றுள்ளார்.

சிவில் துறையில் சேவை செய்வது தனது கனவு என ஐஸ்வர்யா கூறியுள்ளார். சிவில் சர்வீஸ் அதிகாரிகள் உட்பட நெட்டிசன்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.