இந்தியா

இந்திய அளவில் நடந்த பாட்டிகளுக்கான அ‌ழகிப் போட்டி!

இந்திய அளவில் நடந்த பாட்டிகளுக்கான அ‌ழகிப் போட்டி!

webteam

பெங்களூருவில் பாட்டிகளுக்கான இந்திய அளவிலான அ‌ழகி போட்டி பலரது கவனத்தைக் கவர்ந்தது.

பெங்களூருவின் அத்திப்பள்ளி அருகேயுள்ள நட்சத்திர விடுதியில் முதல்முறை‌யாக பாட்டிகளுக்கான அ‌ழகிப்‌ போட்டி நடைபெற்றது. இந்திய அளவில்‌ நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, பஞ்சாப்,‌ மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பாட்டிகள் பங்கேற்று அசத்தினர். இளம்பெண்கள் போல நவீன ஆடைகளை அணிந்து நளினமான நடையுடன் பாட்டிகள் அணிவகுத்து வந்து அசத்தினர். 

பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற போட்டியில் சிறந்த சிகை அலங்காரம், சிறந்த உடல் அமைப்பு, சிறந்த இளமைத் தோற்றம் உள்ளிட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. அழகு என்பது வெளிப்புறத் தோற்றமல்ல, அது தன்னம்பிக்கை சார்ந்தது என்பதை விளக்கும் விதமாக நடந்த இந்தப் போட்டி பலரையும் கவர்ந்தது.