இந்தியா

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..!

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..!

Rasus

மிஸ் இந்தியா 2019-ஆம் ஆண்டிற்கான பட்டத்தை ‌‌ராஜஸ்தானைச் சேர்ந்த சுமன் ராவ் என்பவர் தட்டிச் சென்றார்.

2019ஆம் ஆண்டிற்கான மிஸ் இந்தியா கிராண்ட் இறுதி சுற்று மும்பையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் உலக அழகி மானுஷி சில்லர், திரைப்பட நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இறுதிச்சுற்றில் ராஜஸ்தானை சேர்ந்த 22 வயது சுமன் ராவ் மிஸ் இந்தியா 2019 வெற்றியாளராக தேர்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் தாய்லாந்தில் நடைபெற இருக்கும் உல‌க அழகி போட்டியில் சுமன் ராவ் பங்கேற்க இருக்கிறார்.

தெலுங்கானாவைச் சேர்ந்த சஞ்சனா விஜ் என்ற அழகி மிஸ் இந்தியா ரன்னர் அப் ஆக தேர்வு பெற்றுள்ளார்.  இதுதவிர பீகாரைச் சேர்ந்த ஸ்ரேயா சங்கர் மிஸ் இந்தியா யுனைடெட், சட்டீஸ்கரைச் சேர்ந்த ஷிவானி மிஸ் கிராண்ட் இந்தியா ஆகிய பட்டங்களையும் பெற்றனர்.