சாய்னா நேவால் - அமைச்சர் மனோ தங்கராஜ்  pt web
இந்தியா

"நாட்டு மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம்.." - அமைச்சர் மனோ தங்கராஜ்

மோடிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்ற புத்தகத்தை மேற்கோள் காட்டி சமுக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

PT WEB

பிரதமர் மோடிக்கு மக்கள் வாக்களிக்க 101 காரணங்கள் என்ற புத்தகத்தை மேற்கொள்காட்டி பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது எக்ஸ் சமுக வலைத்தள பக்கத்தில் கடந்த 1ம் தேதி பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில்,

“சாந்தனு குப்தாவின் 'நான் மோடிக்கு வாக்களிக்க 101 காரணங்கள்' என்ற புத்தக வெளியீட்டைப் பகிர்ந்து கொள்வதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்!” என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் மனோ தங்கராஜ் தனது தனது சமுக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் நேற்று இரவு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “சாய்னா நேவால் நாட்டு மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம். நீங்கள் நாட்டை நேசிப்பவர், உண்மையான நடுநிலையாளர் என்றால், 'மோடிக்கு நாட்டு மக்களின் 108 கேள்விகள்’ என்ற புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டும். அவற்றிற்கான பதில்களை பிரதமரிடம் இருந்து கேட்டு பெற்றுதாருங்கள்” என்று பதிவிட்டுள்ளர்.