உத்தரபிரதேச மாநிலம் அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நபரை கிராம மக்கள் அடித்தே கொலை செய்துள்ளனர்.
சமீப காலங்களாக பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில். உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 7 வயது சிறுமியை, நிரஞ்சன் என்ற இளைஞன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளான். இதையடுத்து, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததும் ஆத்திரமடைந்த கிராம மக்கள், அவனை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த நிரஞ்சன் உயிரிழந்தான். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.