இந்தியா

அமலானது குடியுரிமை திருத்தச் சட்டம் - அறிவிப்பாணை வெளியிட்டது உள்துறை அமைச்சகம்

அமலானது குடியுரிமை திருத்தச் சட்டம் - அறிவிப்பாணை வெளியிட்டது உள்துறை அமைச்சகம்

webteam

குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் அமலானதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன்படி குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். அதனையடுத்து, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் அமலானதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.