ஜிஎஸ்டி அமல்படுத்துவதை செப்டம்பர் ஒன்றாம் தேதிக்கு தள்ளி வைக்குமாறு மத்திய நிதி அமைச்சகத்தை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச அளவிலான விமான பயணச் சீட்டு முறையில் மாற்றங்கள் செய்யவதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக நிதி அமைச்சகத்துக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் விடுத்துள்ள கோரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா மற்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்கள் சர்வதேச பயணச்சீட்டு விநியோக முறையின்கீழ் செயல்படுவதாகவும், அவை ஜிஎஸ்டிக்கு மாற மென்பொருள் மாற்றம் உள்ளிட்ட பல பணிகளை செய்ய வேண்டியிருப்பதாகவும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.
நாடு தழுவிய ஜிஎஸ்டி முறை வரும் ஒன்றாம் தேதி முதல் அமலாகும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அதன் ஒரு துறையே ஜிஎஸ்டியை ஒத்தி வைக்க கோரிக்கை விடுத்துள்ளது.