இந்தியா

மதரஸாக்களில் ஒரு லட்சம் கழிவறைகள்: அமைச்சர் தகவல்

மதரஸாக்களில் ஒரு லட்சம் கழிவறைகள்: அமைச்சர் தகவல்

webteam

மதரஸா பள்ளிகளில் அடுத்த நிதியாண்டுக்குள் ஒரு லட்சம் கழிவறைகள் கட்டப்படும் என சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பல மாநிலங்களில் செயல்பட்டு வரும் இஸ்லாமியர்களுக்கான கல்வி நிலையமான மதரஸா பள்ளிகள், சமயப் பாடங்களிலும், சமயச் சார்பற்றப் பாடங்களிலும் மாணவர்களுக்கு கற்றலை புகுத்தி வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் மதரஸாக்களில் அடுத்த நிதியாண்டுக்குள் ஒரு லட்சம் கழிவறைகள் கட்டப்படும் என அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.