இந்தியா

ஐடி நிறுவனங்களுடன் அமைச்சர் ஆலோசனை!

ஐடி நிறுவனங்களுடன் அமைச்சர் ஆலோசனை!

Rasus

தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏராளமான பணியாளர்கள் வேலை இழக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவரும் சூழலில் இது தொடர்பாக விவாதிப்பதற்காக, நாட்டின் முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விரைவில் ஆலோசனை நடத்தவுள்ளார். 

ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ், ஹெச்சிஎல் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை வலுவாக இருப்பதாகவும் அடுத்த சில ஆண்டுகளில் மேலும் பல லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 

டிஜிட்டல் இந்தியா என்ற இலக்கை நோக்கி நகர்ந்து வரும் சூழலில் வேலை வாய்ப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். எனவே இந்தச் சூழலில் ஏராளமாக பணியிழப்புகள் ஏற்படும் என கூறுவது ஏற்புடையது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அடுத்த ஆண்டில் ஏராளமான ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக சமீப காலமாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.