அஸ்வினி வைஷ்ணவ் ani
இந்தியா

சர்ப்ரைஸ் செய்தி!! சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. எப்போது தெரியுமா?

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Prakash J

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி இந்த கோரிக்கையை மத்திய அரசிடம் முன்வைத்து வருகிறது. முன்னதாக, பீகார் மற்றும் கர்நாடக ஆகிய மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற்ற பிறகு, இந்தக் கோரிக்கை மீண்டும் வலுபெற்று வருகிறது. தெலங்கானாவில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, தேர்தல் வாக்குறுதியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் எனக் குறிப்பிட்டிருந்தது. அதன்படி, தெலங்கானாவில் 1.12 கோடி குடும்பத்தாரிடம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

அஸ்வினி வைஷ்ணவ்

இந்த நிலையில், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டம் தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாகவும், அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.